தமிழகத்தில் புதிதாக 10 கலை - அறிவியல் கல்லூரிகள்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் க.பொன்முடி
அமைச்சர் க.பொன்முடி

தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் பொன்முடி, புதிதாக அமைக்கப்படவுள்ள 10 கல்லூரிகளுக்கான இடங்களை அறிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 9 இடங்களில் இருபாலர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கூத்தாநல்லூரில் மகளிர் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது.

செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்படவுள்ளது.

மேலும், வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கப்படவுள்ளது.” 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com