

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக நகர் குளிர்ச்சியாக காணப்பட்டது.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையைப் பொருத்தவரையில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்: 200 கோடியைக் கடந்த சீனா
இந்நிலையில் சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் மதியம் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. தியாகராய நகர், அயனாவரம், சைதாப்பேட்டை, அண்ணாநகர், பெரம்பூர் , கொரட்டூர், அம்பத்தூர், கோட்டூர்புரம், நந்தனம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகக் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.