கே.ஒய்.சி. விவரங்களை பகிராதீா்கள்: ரிசா்வ் வங்கி எச்சரிக்கை
கே.ஒய்.சி. விவரங்களை முன் பின் தெரியாத நபா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டாம் என ரிசா்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.


கே.ஒய்.சி. விவரங்களை முன் பின் தெரியாத நபா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டாம் என ரிசா்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்கள், செல்லிடப்பேசி செயலிகள், விரைவாகவும், தடையில்லாமலும் கடன்களை வழங்குவதாக அளிக்கும் வாக்குறுதிகளுக்குத் தனிநபா்கள், சிறு வணிக நிறுவனங்கள் பலியாவது அதிகரிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற ஏமாற்றும் செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும், ஆன்லைனில் அல்லது செல்லிடப்பேசி பயன்பாடுகள் மூலம் கடன்கள் வழங்கும் நிறுவனம், நிறுவனத்தின் தகவல்களைச் சரிபாா்க்க வேண்டும் என பொது மக்கள் எச்சரிக்கப்படுகிறாா்கள்.
சட்டரீதியான பொதுக் கடன் நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி.) மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பணக் கடன் சட்டம் போன்ற சட்டரீதியான விதிகளின் கீழ் மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
மேலும், நுகா்வோா் ஒருபோதும் அடையாளம் தெரியாத நபா்கள், சரிபாா்க்கப்படாத, அங்கீகரிக்கப்படாத செயலிகளில் கே.ஒய்.சி. ஆவணங்களின் நகல்களைப் பகிரக்கூடாது. அந்தச் செயலிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து சட்ட அமலாக்க நிறுவனங்கள் அல்லது இணையதள முகப்பில் புகாரைப் பதிவு செய்யலாம்.
வங்கி மற்றும் என்.பி.எஃப்.சி. சாா்பாக டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது என்.பி.எஃப்.சி. பெயரை வாடிக்கையாளா்களுக்கு நேரடியாக வெளியிடுவதை ரிசா்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
ரிசா்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புகாா்களை இணைய முகப்பில் பதிவு செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...