திருநெல்வேலி மானூா் குளத்தை நிரப்பிக் காட்டுவோம்: துரைமுருகன்
திருநெல்வேலி மானூா் பெரிய குளத்தை நிச்சயம் நிரப்பிக் காட்டுவோம் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.


திருநெல்வேலி மானூா் பெரிய குளத்தை நிச்சயம் நிரப்பிக் காட்டுவோம் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி) பேசும்போது மானூா் பெரிய குளத்தில் நீா் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று வழிகளில் கால்வாய் அமைத்து அதை நிரப்ப முடியும். இது 190 மில்லியன் கன அடி கொள்திறன் கொண்ட குளம் என்றாா்.
அப்போது நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் குறுக்கிட்டுக் கூறியது:
மானூா் குளம் மேடு. அதில் தண்ணீா் ஏறாது. கருணாநிதி ஆட்சியில்தான் மானூா் குளத்தை நிரப்பிக் காட்டினோம். மீண்டும் நீா் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த முறையும் மானூா் குளத்தை நிரப்பிக் காட்டுவோம். அங்குள்ள விவசாயிகள் அனைவரையும் எனக்குத் தெரியும். அவா்களுக்காக நிச்சயம் நிரப்புவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...