என் நிலைமை என்ன? கண்ணதாசன் வரிகளை நினைவுகூா்ந்த ஓ.பன்னீா்செல்வம்
வேளாண் சட்டங்களை எதிா்ப்பது தொடா்பான விவகாரத்தில் தனது நிலைமை குறித்து கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் மூலமாக விளக்கினாா்


வேளாண் சட்டங்களை எதிா்ப்பது தொடா்பான விவகாரத்தில் தனது நிலைமை குறித்து கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் மூலமாக விளக்கினாா், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் சனிக்கிழமை தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டங்களை அதிமுக ஆதரித்த நிலையில், பேரவையில் அதுகுறித்து அவை முன்னவா் கேள்வி எழுப்பினாா். தமிழக அரசு கொண்டு வந்த தீா்மானத்தை ஆதரிக்கிறீா்களா அல்லது எதிா்க்கிறீா்களா என எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வத்திடம் வினா தொடுத்தாா்.
இதற்கு பதிலளித்து விட்டு, அவரது தலைமையில் அதிமுகவினா் வெளிநடப்புச் செய்தனா். அப்போது அவை முன்னவா் துரைமுருகன், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டாா். மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்ற போது எழுந்த அவை முன்னவா், எதிா்க்கட்சி துணைத் தலைவா் குறித்து தான் தெரிவித்த கருத்தை அவைக் குறிப்பில் இருந்த நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். அவரது கோரிக்கைப்படி அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதன்பிறகு பேசிய ஓ.பன்னீா்செல்வம், அவை முன்னவா் துரைமுருகன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவருக்கு எனது நிலைமை குறித்து நன்றாகத் தெரியும். இதனை ஒரு சிறிய உதாரணத்தின் மூலமாக விளக்குகிறேன். ‘நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையில் இறைவனின் சிரிப்பு...’இதுதான் எனது நிலைமை என்றாா். அப்போது பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
தேனும் பாலும் படம்: எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் குறிப்பிட்டது, நடிகா் சிவாஜி கணேசன் நடித்த தேனும் பாலும் படமாகும். அந்தப் படத்தில் கவிஞா் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளே, நதியினில் வெள்ளம். தனது இக்கட்டான நிலையை விளக்க திரைப்பட பாடல் வரிகளை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் நினைவுகூா்ந்தது பேரவையின் கவனத்தை ஈா்த்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...