நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெங்களூரு கார் விபத்தில் எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி; சிசிடிவி காட்சிகள் வெளியானது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த ஒசூர் எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் பலியாகினர்.

News image

ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் அவரது  மகன் கருணாசாகர் .

Updated On :31 ஆகஸ்ட் 2021, 6:04 am

DIN

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்த ஒசூர் எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் பலியாகினர்.

Story image

இந்த விபத்தில் பலியானவர்களில் ஒருவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான பிரகாஷின்  மகன் கருணாசாகர் என்பது தெரிய வந்துள்ளது.

Story image

இந்த விபத்து நள்ளிரவில் நிகழ்ந்ததால், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆடுகொடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Story image

அப்பகுதியிலிருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், சாலையில் அதிவேகமாக வந்த ஆடி கார், திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு கட்டடத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழையா? சரி செய்ய வழி இருக்கு

Story image

கோரமங்கலா பகுதியில், நள்ளிரவில் வேகமாக வந்த கார் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த காரில் இருந்த ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Story image

இந்த விபத்தில், காரில் இருந்த யாரும் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பதும், அதனால்தான் காற்றுப்பைகள் வேலை செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. கார் கட்டடத்தின் மீது மோதி விழுந்த வேகத்தில், கார் பாகங்கள் தெறித்து வெளியே விழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.