தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு: சாத்தூர் வியாபாரிகள் மனு

ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. 

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:06 am

DIN

ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்வே மேம்பாலப் பணிக்காக ரயில்வே பீடர் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்படுவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரயில்வே பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தியும் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன் மற்றும் வட்டாட்சியர் முத்துலட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் ரயில்வே மேம்பாலம் அமைவதற்கான மாற்றுப் பாதையையும் வியாபாரிகள் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.