சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விபின் ராவத் நிலை என்ன?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரி சென்ற ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானது. 

News image

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி?

Updated On :8 டிசம்பர் 2021, 9:07 am


குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படை ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர்  உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

Story image


விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி உறுதியாகத் தெரியவில்லை.

Story image

நஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில்  ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 ராணுவ உயரதிகாரிகளின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

பகல் 1.43 மணி நிலவரம்: முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம்ஐ-வகை ராணுவ ஹெலிகாப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.