குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் சென்ற பயணிகளின் விவரம் வெளியாகியுள்ளது.
அதாவது தில்லியில் இருந்து சூலூர் சென்ற ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், லெப்டினன்ட் கர்னல் ஹஜிந்தர் சிங் உள்ளிட்டோர் பயணித்துள்ளனர்.
இதையும் படிக்க | விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சென்ற ஹெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விபின் ராவத் நிலை என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ஐஐடி-யில் மாணவா்களுக்கு கோடைகால தொழில்நுட்ப பயிற்சிகள்

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

தொகுதி அறிமுகம்: பரமத்திவேலூா்

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


