25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

குன்னூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கோவை செல்கிறார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:39 am

DIN

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கோவை செல்கிறார். 

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோவையில் இருந்து 6 சிறப்பு மருத்துவக்குழுக்கள் சூலூர் சென்றுள்ளன. 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்து நடந்த இடத்துக்கு நேரடியாக செல்கிறார். இன்று மாலை 5 மணியளவில் தனி விமானம் மூலமாக அவர் கோவை செல்லவிருக்கிறார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.