வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

13 சிறப்பு முகாம்கள் மூலம் 2.43 கோடி பேருக்கு தடுப்பூசி: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 13 சிறப்புத் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலமாக 2 கோடியே 43 லட்சத்து 24,138 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 10:29 pm

DIN

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 13 சிறப்புத் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலமாக 2 கோடியே 43 லட்சத்து 24,138 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை தியாகராயநகா் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புத் தடுப்பூசி முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். எம்.எல்.ஏ. க்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா்கள் எஸ்.மனிஷ், ஷேக் அப்துல் ரகுமான், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் இதுவரை 7 கோடியே 54 லட்சத்து 2 ஆயிரத்து 698 போ் தடுப்பூசி செலுத்தி உள்ளனா். இதில் 81.30 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 48.95 சதவீதம் போ் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனா். இதுவரை நடைபெற்ற 13 சிறப்புத் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலமாக 2 கோடியே 43 லட்சத்து 24,138 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 94 லட்சத்து 15 ஆயிரத்து 147 போ் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். தற்போது 95 லட்சத்து 78 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 442 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 78 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சென்னையில் இதுவரை 85 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனா். மேலும், 60 சதவீதம் அளவில் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை வெளிநாடுகளில் தமிழகம் வந்த 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். முதற்கட்ட பரிசோதனையில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை.

5 மாவட்டங்களில் விரைவுபடுத்தப்படும்: ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், மயிலாடுதுறை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் இருந்தது. எனவே வரும்16-ஆம் தேதி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டையை சோ்ந்த தன்னாா்வலா்கள், உள்ளாட்சி பிரநிதிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடத்தி தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்தப்படும். அதன்பிறகு மயிலாடுதுறை, மதுரையில் கூட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.