தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் சொத்து விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்கிற தலைமைச் செயலாளர் இறையன்புவின் உத்தரவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூலில், தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் வாங்கிய அசையா சொத்துகள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளது வரவேற்கதக்கது.
இதுபோன்ற செயல் வெளிப்படை தன்மையையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டு செல்ல வழிவகுக்கும்.