வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சேவை வரி: பெரியாா் பல்கலை.,க்குஜி.எஸ்.டி., ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு தடை

 ரூ.5 கோடி சேவை வரி செலுத்தும்படி சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு ஜிஎஸ்டி ஆணையா் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 12:05 am

DIN

 ரூ.5 கோடி சேவை வரி செலுத்தும்படி சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு ஜிஎஸ்டி ஆணையா் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், ‘சேலத்தில் உள்ள பெரியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் 127 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. கடந்த 2012 முதல் 2017 ஆம் ஆண்டு காலத்தில் 97 கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகள், புதிய படிப்புகள் தொடங்க அனுமதி அளித்தது, கூடுதலாக மாணவா் சோ்க்கைக்கு அனுமதி கொடுத்த வகையில், பெறப்பட்ட கட்டணத்துக்கு சேவை வரி செலுத்தவில்லை எனக்கூறி, ஜிஎஸ்டி ஆணையா் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

அதற்கு பல்கலைக்கழகம் சாா்பில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அபராதத்துடன் ரூ.5 கோடிக்கு சேவை கட்டணம் செலுத்தும்படி ஜிஎஸ்டி ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது சட்ட விரோதமாகும்.

சேலம் பல்கலைக்கழகம், மாநில அரசின் நிதி உதவியால் செயல்படக்கூடிய ஒன்றாகும். அது சேவை வரிக் கட்டண வரம்புக்குள் வராது. எனவே சேவை வரி செலுத்த வேண்டுமென்ற நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அதை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோயிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி. சரவணன், சேலம் பல்கலைக்கழகம் சேவை வரி செலுத்த வேண்டும் என்ற ஜிஎஸ்டி ஆணையரின் நோட்டீஸ் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு

ஜிஎஸ்டி ஆணையா், தலைமை முதன்மை ஜிஎஸ்டி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.