புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு அரசு விதிக்கப்படும் வரியை குறைக்கக்கோரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் அதிக அளவில் சினிமா படப்பிடிப்பு நடந்து வந்தது. சினிமா படப்பிடிப்பு நடத்த அரசு வரி விதித்து வருகின்றது. மற்ற மாநிலங்களை விட படப்பிடிப்பு வரியானது குறைவாக இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு வரியை உயர்த்தியது.
இதனை புதுச்சேரி அரசு குறைக்கவேண்டும் என நடிகர்கள் பார்த்தீபன், பிரசாந்த் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஏற்கனவே கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்பட உள்ள குறும்படத்தில் நடிப்பதற்கு இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் நடிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். அப்போது சினிமா படப்பிடிப்புக்கு அரசு சார்பில் விதிக்கப்படும் வரியை குறைக்கக்கோரி மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்படும் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு இல்லை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர் அறிவிப்பு!!

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

