ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒரு திட்டத்தை யோசித்து செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இல்லை: அண்ணாமலை 

ஒரு திட்டத்தை அறிவார்ந்து யோசித்து செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

News image
ஒரு திட்டத்தை யோசித்து செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இல்லை: அண்ணாமலை 
Updated On :14 டிசம்பர் 2021, 7:23 am

DIN


தூத்துக்குடி: ஒரு திட்டத்தை அறிவார்ந்து யோசித்து செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சி சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். 

தொடர்ந்து அவர், விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், திமுக ஆட்சியில் இந்த ஊழல்கள் மேல்மட்டத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே கட்சியை சேர்ந்த வட்ட செயலாளர், கிளை கழக செயலாளர், தொண்டர்கள் யாரும் களத்தில் மக்கள் பணி செய்வதற்கு முன்வரவில்லை. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் நான்கு மாதங்களில் தமிழக மக்களே பேசத் தொடங்குவார்கள். அவர்களே அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை உருவாகும்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் திமுகவினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துகின்றனர். எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. 

மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!

மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன்  செயல்பட்டுவரும் நிலையில்,  தமிழகத்தில் திமுக அரசு அதிலும் கமிஷன் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்க ஊக்குவிப்பதை விட்டுவிட்டு, கோவை மாவட்ட விவசாய பகுதியில் 3822 ஏக்கர் பரப்பளவில் தேவையின்றி தொழிற்சாலை அமைக்க முயல்கின்றனர். தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்க உரிமம் பெறுவதிலிருந்து தொழிலில் வருவாய் ஈட்டும் வரையில் திமுக அரசு  முட்டுக்கட்டை இடுகிறது.  இதை எல்லாம் தவிர்த்தால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும்.

தமிழக அரசின் கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. தமிழகத்தில் வருவாய் அதிகரிக்கக்கூடிய புதிய திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் இல்லை. அதன் வெளிப்பாடே சமீபகாலமாக ஆணவ கொலைகள் அதிகரித்து வருகிறது. எனவே காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் மிக சிறப்பாக செயல்பட கூடிய திறன் தமிழக காவல்துறைக்கு உள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.