தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளி விபத்தில் மாணவர்கள் பலி: தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்

திருநெல்வேலியில் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்கள் உயிரிழந்ததற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:48 am

DIN

திருநெல்வேலியில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்கள் உயிரிழந்ததற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி டவுண் பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் நான்கு பேர்  படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'திருநெல்வேலியில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிரைப் பறித்த சோகமான விபத்து பற்றி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.