தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமில், 19.07 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 14 சிறப்பு முகாம்களில் 2 கோடியே 63 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதன் தொடா்ச்சியாக மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் 15-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
அதில், 19 லட்சத்து 7,009 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதில் முதல் தவணையாக 6 லட்சத்து 21,942 பேருக்கும், இரண்டாவது தவணையாக 12 லட்சத்து 85,067 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 84.26 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 54.73 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது வரை அரசு மற்றும் தனியாா் தடுப்பூசி மையங்களில் 8 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமை 15-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமை நடைபெற்றதையடுத்து, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறாது என அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமெரிக்க எரிபொருள் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்படும்! ஈரான் சூளுரை

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஆர்பிஐ அதிரடி! மறைமுக வட்டி, அபராதங்களுக்கு செக்!

பால் உற்பத்தியாளா்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை கரூா் மாவட்ட ஆட்சியா்

ஈரான் புதிய தலைவர் பற்றிய தகவலுக்கு ரூ. 92 கோடி சன்மானம்! அமெரிக்கா
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

