விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா சிகிச்சையில் 6,708 போ்

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்குள்ளாகி 6,708 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 7:26 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்குள்ளாகி 6,708 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

மாநிலத்தில் இதுவரை 5.68 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 43,427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் பகுதிகளில் இருந்து வந்த மூவா் உள்பட 606 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 165 பேருக்கும், கோவையில் 87 பேருக்கும், செங்கல்பட்டில் 50 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 685 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 99,994-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,708 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,725-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.