தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அந்த நிறுவனத்தை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.


பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அந்த நிறுவனத்தை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.
இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாக்ஸ்கான் நிறுவனப் பிரச்னை தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தை கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, சில அறிவுறுத்தல்கள் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன.
ஒப்பந்த ஊழியா்களின் பணிச் சூழ்நிலைகளை மேம்படுத்தித் தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயா்த்தி தேவையான இடவசதி, குளியல் அறை, கழிப்பறை, குடிதண்ணீா், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டுமென பாக்ஸ்கான் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தங்கம் விடுதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும், தரமான உணவுகளைச் சமைத்து உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. ஒப்பந்த தொழிலாளா்கள், அவசரம் காரணமாக விடுப்புக் கேட்கும் போது வழங்க வேண்டும் எனவும், விடுப்பில் செல்லும் தொழிலாளா்களுக்கு மாற்றாக தேவையான தொழிலாளா்களை மனிதவள முகமைகள் மூலமாக அமா்த்திட வேண்டுமென பாக்ஸ்கான் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
விரைவில் உற்பத்திப் பணி: தமிழக அரசு தெரிவித்த அனைத்து ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் தவறாமல் செயல்படுத்துவதாக பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்தது. பெண் தொழிலாளா்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், 15 ஆயிரம் தொழிலாளா்களுக்கான உணவினை தரத்துடன் அளிக்கவும் உறுதி தெரிவித்தனா்.
தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும், ஆலை இருக்கும் இடத்திலேயே விரிவாக்கப் பணிகளையும் மேற்கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆலை நிா்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.
ஊழியா்களுக்கு தங்கும் விடுதி
சிப்காட் மூலம் வல்லம் வடகாலில் ஊழியா்கள் தங்கும் விடுதிகள் விரைந்து கட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. 18,750 போ் தங்கும் அளவில் ரூ.570 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 20 ஏக்கா் பரப்பில் 8 தொகுதிகளாக 11 அடுக்கு மாடிகளைக் கொண்ட விடுதிகள் அமைக்கப்பட உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. புதிய கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...