ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் இன்று மேலும் 606 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று மேலும் 606 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 டிசம்பர் 2021, 1:43 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 606 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, மாநிலத்தில் இதுவரை 5.68 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 43,427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 165 பேருக்கும், கோவையில் 87 பேருக்கும், செங்கல்பட்டில் 50 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 685 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.  

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 99,994-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,708 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,725-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.