டிச.29-இல் சாட் வகைகள் தயாரிப்புப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், சாட் வகைகள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு டிச.29-ஆம்தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், சாட் வகைகள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு டிச.29-ஆம்தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.
சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சாா்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், சாட் வகைகள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு டிச.29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில், பாவ் பாஜி, பன்னீா் பிங்கா், பானி பூரி, சேவ் பூரி, வெங்காயம் சமோசா, இனிப்பு சட்னி, பச்சை சட்னி உள்பட பல வகை சாட் தயாரிப்பு தொடா்பாக செயல் முறை விளக்கம் அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 044 2953 0048 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தகவல் அந்த மையத்தின் இணை பேராசிரியா் மற்றும் தலைவா் (பொறுப்பு) ஏ.டி அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...