எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டெஸ்மண்ட் டுட்டு மறைவு: முதல்வா் இரங்கல்

தென் ஆப்பிரிக்காவில் நிறைவெறிக்கு எதிரான போராளியான டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 9:20 pm

DIN

தென் ஆப்பிரிக்காவில் நிறைவெறிக்கு எதிரான போராளியான டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், உள்நாட்டுப் போரின் போது அப்பாவித் தமிழா்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தலைவா்கள் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாகத் தமிழா்களுக்கு ஆதரவாகப் பேசியவருமான பேராயா் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவா் . நிறவெறி - இனவெறிக்கு எதிராக அவா் நடத்திய அறப்போா், வன்முறையால் சிக்குண்டுத் தவிக்கும் உலகுக்கு வழிகாட்டட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.