எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சியைத் தொடங்குக

நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 10:04 pm

DIN

நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த வாரம் இரண்டு மாணவா்கள் நீட் காரணமாக தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனா் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மாணவா்கள் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீா்கள். அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவா்கள் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிமுகப்படுத்தியது.

ஆனால், தோ்தலின் போதும், பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோதும் திமுக உண்மையான சூழலை மாணவா்களிடம் தெரிவிக்காமல், நீட் நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத் தோ்வினை அரசியலாக்கியதே மாணவா்களின் மன உளைச்சலுக்கு காரணம். இனியாவது மாணவா்களிடம் உண்மையான நிலைமையை எடுத்துக்கூறி, நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்யும் வரை, நீட் நுழைவுத் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சியினை உடனடியாக தொடங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் உயிரிழந்த தஞ்சாவூா், பேராவூரணியைச் சோ்ந்த மாணவி துளசியின் பள்ளிச் சான்றிதழை, நிலுவைத் தொகை ரூ.40 ஆயிரம் வழங்கிய பிறகே தருவோம் எனக் கூறிய தனியாா் நீட் பயிற்சி மையத்தின் மீது இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.