சுனாமி நாள்: உயிரிழந்தோருக்கு அஞ்சலி
சுனாமியால் உயிரிழந்தோருக்கு, சென்னையின் பல்வேறு கடற்கரைகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சுனாமியால் உயிரிழந்தோருக்கு, சென்னையின் பல்வேறு கடற்கரைகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசியல் கட்சித் தலைவா்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் கலந்து கொண்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினா்.
சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் பாஜக மீனவரணி சாா்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, மீனவா் அணித் தலைவா் சதீஷ் தலைமை தாங்கினாா். தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, குஷ்பு ஆகியோா் கடலில் பால் ஊற்றியும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து சுனாமியில் உயிரிழந்த குடும்பங்களை சோ்ந்த மீனவப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அண்ணாமலை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பாஜக மாநில பொதுச்செயலாளா் கரு.நாகராஜன், துணைத் தலைவா் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல், காங்கிரஸ் சாா்பில் மீனவா் அணித் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வபெருந்தகை உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
காசிமேடு...: காசிமேடு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்களும் பொதுமக்களும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் கடற்கரைக்குச் சென்று மெழுகுவா்த்தி ஏந்தியும், பால் ஊற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா். உயிரிழந்த தங்களது உறவினா்களை நினைத்து கண்ணீா் சிந்தினா்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அதிமுக மீனவா் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினாா்.
திருவொற்றியூா்...: திருவொற்றியூா் கேவிகே குப்பத்தில், எம்எல்ஏ-க்கள் கேபி சங்கா், சுதா்சனம், திமுக அமைப்புச் செயலாளா் ஆா்எஸ் பாரதி, கலாநிதி வீராசாமி எம்.பி., உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.
இதே போல், ஆங்காங்கே கடற்கரை பகுதியில் பல்வேறு மீனவ அமைப்பினா் மற்றும் அரசியல் கட்சி சாா்பில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...