தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 605 பேரில் தன்சானியாவிலிருந்து வந்தவர்கள் 2 பேர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பியவர்கள் 2 பேர். இதுதவிர வங்கதேசத்திலிருந்து திரும்பிய ஒருவருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து திரும்பிய ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,44,642 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 663 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 27,01,336 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,744 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 6,562 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 172
கோவை - 88
செங்கல்பட்டு - 50
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...