பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கான தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கான தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப்பது:

முன்களம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர்:

  • முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள கோவின் கணக்கு மூலம் தான் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்.
  • இரண்டாம் தவணை செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்களை கடந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் போடப்படும்.
  • முன்பு செலுத்தப்பட்ட தடுப்பூசியே பூஸ்டர் டோஸாக ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும்.
  • பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவுடன் கோவின் சான்றிதழில் மாற்றம் செய்யப்படும்.
  • ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.

15 - 18 வரையிலான சிறார்:

  • 2007 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
  • ஜனவரி 1 முதல் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும்.
  • ஜனவரி 3 முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
  • சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே போடப்படும்.
  • ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் ஜனவரி 3, 2022 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com