காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஜன.2 வரை பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை: தமிழக அரசு

அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
பள்ளிக்கல்வித்துறை
Updated On :27 டிசம்பர் 2021, 9:54 am

DIN

அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருவதாக தமிழக அரசுக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளை திறக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விடுமுறை நாள்களில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தக் கூடாது என சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.