புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே மீனவர் சாலையைச் சேர்ந்தவர் சேக்தாவூத் மகன் அம்ஜத்கான் (44). இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கருவுற்றதை அடுத்து பெண்ணின் தாய் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 18ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அம்ஜத்கானைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளி அம்ஜத்கானுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர். சத்யா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. அரசுத் தரப்பில் ஏற்கெனவே ரூ. 3.50 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ரூ. 2.50 லட்சம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


