சங்ககிரியில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா
காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ். ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை கேக் வெட்டி கொண்டாடினர்.


சங்ககிரி: காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.எஸ். ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை கேக் வெட்டி கொண்டாடினர்.
காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
இதையும் படிக்க.. கரோனா தடுப்பூசி, பேரிடரை வெல்லும் பேராயுதமானது எப்படி?
காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
மாவட்ட துணை தலைவர் லட்சுமணன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலர் பிபி.சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணை செயலாளர் நடராஜ், முன்னாள் நகரத்தலைவர் காசிலிங்கம், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் ஒருங்கிணைப்பாளகள் கே ராமமூர்த்தி, வைகுந்தம் ராஜா, நகரச்செயலர் எ.ரவி, நிர்வாகிகள் அங்கமுத்து, லோகநாதன், சின்னுசாமி, முருகேசன் செல்வம், ஆறுமுகம், சந்திரன், ஆறுமுகம், கருப்பண்ணன், குமார், சரவணன், ரவி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் விஸ்வநாதன், கார்த்தி, நவீன், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் அகில், சுரேந்தர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மேட்டூர், வீரக்கல் புதூர் நகரத் தலைவர் எஸ்.என். ராஜன், சங்ககிரி அருகே உள்ள வளையசெட்டிபாளையம் சுப்பு, கருக்கம்பாளையம் மணிகண்டன் ஆகியோர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் சி.எஸ்.ஜெய்க்குமார் முன்னிலையில் சங்ககிரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றவிழாவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களை மாவட்டத்தலைவர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...