ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வுக்கான தேதியை தேர்வுத்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2021, 10:30 am

DIN

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வுக்கான தேதியை தேர்வுத்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்த கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட செய்தியில்,

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையும் முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.