காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

News image
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Updated On :28 டிசம்பர் 2021, 6:24 am

DIN

தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

பள்ளிக் கட்டடங்களின் தன்மை, பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பில்லாத கட்டங்களை இடிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதன்படி 1,500 பள்ளிக் கட்டடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அடுத்ததாக, பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளிக்க அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும். மேலும், 14417 என்ற புகார் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். ஜனவரி முதல் வாரத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கிவிடும். அதன்படி, ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.