வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னையில் 18 செ.மீ. மழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னையில் 5 மணி நேரத்தில் 18 செ.மீ. மழைப் பெய்துள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 1:57 pm

DIN

சென்னையில் 5 மணி நேரத்தில் 18 செ.மீ. மழைப் பெய்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், கொருக்குப்பேட்டை, வில்லைவாக்கம், அயனாவரம், ஐசிஎஃப் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
எம்.ஆர்.சி நகர் 18 செ.மீ., நுங்கம்பாக்கம், ஒய்எம்சிஏ நந்தனம் - தலா  12 செ.மீ., மீனம்பாக்கம் 10 செ.மீ., அண்ணா பல்கலை. 8 மழைப்பதிவாகி உள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணம் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.