

சென்னை: 2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியதாவது, சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும்.
தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளுக்கு மூலதன நிதியாக கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி வரை வழங்கப்படும்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு (ஐஐபிஓ ) வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.