மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து இளவரசி விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையிலிருந்து சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று விடுதலை செய்யப்பட்டார்.

News image

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து இளவரசி விடுதலை

Updated On :5 பிப்ரவரி 2021, 7:33 am


பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையிலிருந்து சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று விடுதலை செய்யப்பட்டார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த இளவரசிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த இளவரசி, பெங்களூருவில் சசிகலா தங்கியிருக்கும் பண்ணை வீட்டில் தங்கியிருப்பார் என்று தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த வாரம் சிறையிலிருந்து விடுதலையான நிலையில், அவரது உறவினர் இளவரசி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.