வேளாண் சட்டம்: திருச்சியில் பேரணி நடத்திய விவசாயிகள் 100 பேர் கைது
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இன்று தடையை மீறி ஏர்கலப்பை பேரணி நடத்திய 100 விவசாயிகள் கைது


திருச்சி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று தடையை மீறி ஏர்கலப்பை பேரணி நடத்திய விவசாயிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் இன்று (பிப்.6) மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் இன்று பிற்பகல் ஏர்கலப்பை பேரணி நடைபெற்றது.

சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் ஏர் கலப்பையுடன் பேரணியாக வந்து மறியலில் ஈடுபட்டனர்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி, கரூர் புறவழிச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...