47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் 2-ஆவதாக விழுப்புரத்தில் சமுதாய நூலகம் திறப்பு

தமிழகத்தில் 2-ஆவதாக விழுப்புரத்தில் அருகே தந்தை பெரியார் நகரில் சமுதாய நூலகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

News image
சமுதாய நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றும் மாவட்ட சமுதாய நூலகம் நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன்.
Updated On :7 பிப்ரவரி 2021, 8:01 am

DIN


விழுப்புரம்: தமிழகத்தில் 2-ஆவதாக விழுப்புரத்தில் அருகே தந்தை பெரியார் நகரில் சமுதாய நூலகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

தமிழகத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் என்ற திட்டத்தை கடந்த 2020-21 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் அறிவித்தார்.

இதன்படி திருச்சியில் சமுதாய நூலகம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அருகே தந்தை பெரியார் நகரில் சமுதாய நூலகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தந்தை பெரியார் நகரில் நடைபெற்ற திறப்பு விழாவில் விழுப்புரம் மாவட்ட மைய நூலக நூலகர் ம.இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

Story image

திரைப்பட உதவி இயக்குநர் கமலேஷ்ராம், அஞ்சல் துறை அலுவலர் க.மகேஸ்வரன், விரிவுரையாளர் குண.பாரி, அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் ச. கார்த்திக் ஆகியோர் நூலகத்தின் சிறப்புகள் குறித்து பேசினர்.

காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், நூலகர் வேல்முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தை பெரியார் நகர் குடியிருப்புவாசிகள் பலர் கலந்து கொண்டனர். ம. சபாபதி நன்றி கூறினார். 

சமுதாய நூலகம் என்ற இந்த திட்டத்தின் மூலம் திறக்கப்பட்ட இந்த நூலகத்தில் முதல் கட்டமாக நூலகத்துறை சார்பாக 500 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.