ஈரோடு: ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சையைச் செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்தும் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள காலி இடத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
அதன்படி இன்று 7 ஆவது நாளாக மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது. இன்று இந்திய மருத்துவச் சங்கத்தின் மகளிர் அணி சார்பில் ஏராளமான பெண் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர். இந்திய மருத்துவச் சங்கத்தின் மகளிர் அணி மாநிலத் தலைவி சித்ரா தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என். ராஜா கலந்து கொண்டு பேசினார். மகளிர் அணி மாவட்டப் பொறுப்பாளர்கள் டாக்டர் நான்சி, டாக்டர் பூர்ணிமா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட கிளைத் தலைவர் பிரசாத், மாநில துணைத் தலைவர் மல்லிகா, மாவட்டச் செயலாளர் செந்தில்வேல், முன்னாள் மாவட்டத் தலைவர் சுகுமார், விஜயகுமார் உள்பட நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் கூறும் போது, ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இந்த சங்கத்தின் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 7 ஆவது நாளாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி வரை இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதன்பிறகு எங்கள் சங்கத்தின் உயர்மட்டக் குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யும். இந்தியா முழுவதும் 50 இடங்களில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 8 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! எம்பிக்களின் கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


