கொடைக்கானலில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் குடிநீர் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
கொடைக்கானலில் குடிநீர் கேட்டு சாலை மறியல்


கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் குடிநீர் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிப் பகுதியில்"கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை இதனால் வில்பட்டி பிரிவு, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி,பாறைப்பட்டி, சத்யாகாலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது"மக்கள் 100-க்கும்"மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் குடி நீர்கேட்டு சாலை மறியலில்"ஈடுபட்டனர். இதனால் கொடைக்கானல் பள்ளங்கி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்பட்டி ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த தலைவி மற்றும் உறுப்பினர்கள், காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

கொடைக்கானல் பகுதிகளில் நகராட்சி மற்றும் "ஊராட்சி பகுதிகளில் தண்ணீர்"டேங் வைத்து தண்ணீர் நிரப்பி வைப்பது" வழக்கம். ஆனால் அந்த தண்ணீர் டேங் வைத்திருக்கும் இடத்தை அருகிலுள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அந்த தண்ணீர் டேங்கை எடுத்து விடுகின்றனர். இந்த செயல்களில் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யும் பணியாளர்கள் உதவியுடன் தண்ணீர் டேங்குகள் அகற்றப்படுவதால்"பொது மக்களுக்கு"தண்ணீர் தேவைப்படும் சமயங்களில் தண்ணீர்"கிடைப்பதில்லை." 

கொடைக்கானல் செண்பகனுர் இருதயபுரம் பகுதியிலும்,வில்பட்டி பிரிவு,சந்தை திடல் பகுதிகளிலும் ஏற்கனவே தண்ணீர் டேங் (சின்டெக்ஸ் டேங்) இருந்த இடத்தில் மீண்டும் தண்ணீர் டேங் அமைப்பதற்கு நகராட்சி,மற்றும் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

அவ்வாறு தண்ணீர் டேங்குகளில் தண்ணீர் இருப்பதால் மக்கள் தங்களுக்கு தேவையான நேரங்களில் எடுத்துக் கொள்ளார்கள் இது போல பிரச்னைகள் வராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com