தை அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரி கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வியாழக்கிழமை தர்ப்பணம் செய்தனர்.

வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத எள், அரிசி மாவு கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கினர்.
தை அமாவாசையை முன்னிட்டு மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு கங்கை மற்றும் காவிரி போன்ற நீர் நிலைகளிலில் தர்ப்பணம் செய்வதால் குடும்பத்தில் முன்னோர்களின் ஆசீர்வாதம் மூலம் குடும்பத்தில் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இதன்படி, வியாழக்கிழமை சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவேரி பாலம் காவிரி படித்துறையில் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

அவர்கள் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத எள், அரிசி மாவு கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கினர்.

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள்.
பின்னர் ஆற்றில் புனித நீராடி, காவிரி நீரை தீர்த்தமாக தங்களது வீடுகளில் தெளிக்கச் எடுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: நயினார் நாகேந்திரன்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


