குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளதாக சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தது குறித்து...

News image

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் - ANI

Updated On :5 ஏப்ரல் 2026, 2:04 pm IST

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்துடன் வெற்றி பெறுவதையே தன்னுடைய இலக்காகக் கொண்டுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. சில கட்சிகள் கூட்டாக இணைந்தும் சில கட்சிகள் தனித்தும் போட்டியிட உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய காமராஜ் நகர் தொகுதியின் வேட்பாளரான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், “எங்கள் மீது புதுச்சேரி மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.

நான் மக்களிடம் சொல்வது என்னவென்றால், தேர்தல் முடியும்வரை நாங்கள் தொடர் பிரசாரத்தில் இருப்போம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.

சுமார் 25 இடங்களைப் பெறுவதே என்டிஏ கூட்டணியின் இலக்கு. காமராஜ் நகரில், புதுச்சேரியிலேயே அதிகபட்ச வாக்கு சதவிகிதத்தைக் கொண்டு வெற்றி பெறுவதே என் இலக்காகக் கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Summary

Jose Charles Martin, leader of the Ambitious Democratic Party, has stated that his goal is to win in Puducherry with a large margin of votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.