மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரேமலதா

விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

News image
விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரேமலதா
Updated On :12 பிப்ரவரி 2021, 7:05 am

DIN


விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கொடிநாளையொட்டி சென்னை சாலிகிராமத்தில் பொதுச்செயலாளர் விஜயகந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கொடியினை ஏற்றினார்.

பின்னர் பிரசார வாகனத்தில் இருந்தவாறே விஜயகாந்த் கட்சித் தொண்டர்களுக்கு  கொடிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது, தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வரும்.

அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும்.

கூட்டணி குறித்து இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள். தொகைக்காட்சி விவாதங்களில் தேமுதிகவினர் இனி பங்கேற்பார்கள்.  

விஜயகாந்த் உத்தரவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரேமலதா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.