மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன்: நாளை முதல் விநியோகம்
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.


மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டமானது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், கடந்த 20.02.2016 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, அம்மா அவர்களின் பிறந்த நாளான 24.02.2016 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில், சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை அனுகி, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்துகின்ற வகையில், கட்டணமில்லா பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. மூத்த குடிமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் வாயிலாக, கடந்த 30.01.2020 வரையில் ஏறத்தாழ, 3,51,617 நபர்கள் பயனடைந்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட கரோனா நோய்த் தொற்று காரணமாக, அத்தியாவசியப் பணிகள் தவிர, பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. நோய் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துகின்ற வகையில், 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அரசால் விதிக்கப்பட்டன.
முதல்வர் தலைமையிலான இந்த அரசு, மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையின் காரணமாக, நோய்த் தொற்று பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கான பேருந்து சேவைகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயக்கிடவும் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, இத்திட்டத்தின் மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோர் மற்றும் புதியதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த டோக்கன்களை, நாளை (15.02.2021) முதல் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
அலுவலக நாட்களில் காலை 8.00 மணி தொடங்கி இரவு 7.30 மணி வரையில், மாதம் ஒன்றுக்கு 10 வீதம் (பிப்ரவரி முதல் ஜுயஅயீ;லை வரை) 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
புதியதாக விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு:
விண்ணப்பப்படிவம் அந்தந்த மையங்களில் வழங்கப்படும். மேலும், மாநகர் போக்குவரத்துக் கழக வலைத்தள முகவரியான, www.mtcbus.tn.gov.in-ல் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அளிக்கும் போது வயது மற்றும் இருப்பிடப் சான்றுக்கான வாக்காளர் அட்டை / ஓட்டுநர் உரிமம் / குடும்ப அட்டை அல்லது பள்ளி சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல் இணைக்கப்பட வேண்டும்.
மேலும், 5 செ.மீ. ஒ 4 செ.மீ. அளவிலான பாஸ்போர்ட் அளவு தற்போதைய இரண்டு புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
கட்டணமில்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்திற்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்ட மாதம் கடந்துவிட்டால் அந்த டோக்கன்கள் காலாவதியானதாகக் கருதப்படும்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதியை சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேரப் பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளிலும் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) பயணம் செய்யலாம்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கும் இடங்கள்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...