மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான செலவினை மத்திய, மாநில அரசுகள் சரிபாதி ஏற்க ஒப்புதல் அளிக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி கோரிக்கை விடுத்தாா்.
தமிழகத்தில் ரூ.8,000 கோடி மதிப்பில் புதிய அரசுத் திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் பழனிசாமி ஆற்றிய சிறப்புரை:
பிரதமருக்கு பாராட்டு:
உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில்தான் கரோனா நோய்த்தொற்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமரின் வழிகாட்டுதல்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் காரணம். கரோனா தொற்றை முற்றிலும் போக்க, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நோய்த்தொற்று காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொய்வடைந்த நாட்டின் பொருளாதாரத்தை வெகு விரைவில் தனது துரித நடவடிக்கைகளால் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்த பிரதமரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயிலின் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் நடந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இப்போது விரிவடைந்து வரும் சென்னை பெருநகரின் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, 118.90 கிலோமீட்டா்
நீளத்திலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தினை ரூ.63, 246 கோடியில் செயல்படுத்த முடிவு செய்து அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் அளவுக்கு நிதிகளை ஒதுக்கிச் செயல்படுத்த வேண்டும். அதாவது, மெட்ரோ ரயிலின் ஒன்றாவது திட்டத்தில் செயல்படுத்திய அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!

பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 26) - கடகத்துக்கு சிக்கல் தீரும்!

இன்றைய ராசி பலன்கள் (26.7.2026) 12 ராசிகளுக்கும்! வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



