மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சென்னையில் கரோனா சிகிச்சையில் 1,559 பேர்: மண்டலவாரியாக விவரம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தற்போது 1,559 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

News image
சென்னையில் கரோனா பாதிப்பு
Updated On :15 பிப்ரவரி 2021, 7:48 am

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தற்போது 1,559 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் இதுவரை 2,33,334 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,123 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,27,652 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 1,559 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது அதிகபட்சமாக அண்ணா நகரில் 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 மண்டலங்களில் 100க்கு மேற்பட்டோரும், 8 மண்டலங்களில் 100க்கும் குறைவானோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.