தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள  தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், புதன்கிழமை நடைபெற்ற  தவக்காலத்திற்கான சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

News image

சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி

Updated On :17 பிப்ரவரி 2021, 3:53 am



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள  தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், புதன்கிழமை நடைபெற்ற  தவக்காலத்திற்கான சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகின்ற  தவக்காலத்தின் தொடக்க நாள் நிகழ்வாக சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக்கொண்டு தவநாள்களை அனுஷ்டிக்க தொடங்குவார்கள்.

அதேபோன்று, கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடைபெற்றது.

இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் முன்னின்று நடத்தினார். இதில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை தொடங்கினர்.

தவக்காலத்தை அனுஷ்டிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருள்களை தவிர்த்து சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவநாள்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.