சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன்: தமிழிசை
புதுச்சேரி சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதால், தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார்.
அப்போது புதுச்சேரி விமான நிலையத்தில் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பேசிய அவர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...