திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கடலூர் அருகே போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

News image

வெட்டி கொலை செய்யப்பட்ட வீரா

Updated On :17 பிப்ரவரி 2021, 3:36 am


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

கடலூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் வீரா என்ற வீராங்கையன் (28). கடலூர் உழவர் சந்தை அருகே பழக்கடை நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுப்பராயலு நகர் அருகே சென்ற போது அவரை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து. தப்பியோட முயன்றவரை விரட்டிச் சென்ற கும்பல் அவரை கொலை செய்து தலையை துண்டித்து தலையுடன் தப்பிச் சென்றனர். 

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

கொலையான வீரா மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, முன்விரோதத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், கொலையானவர் தலையை சுமார் 200 மீட்டர் தூரத்தில், ஏற்கனவே வீரா சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் கொலையான சேகர் வீட்டின் முன்பு வைத்து விட்டு சென்றனர். எனவே, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். நள்ளிரவில் சிலரை புதுப்பேட்டை பகுதியில் கைது செய்த நிலையில், மேலும் சிலர் பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில் போலீஸார் அங்கு சென்ற போது கிருஷ்ணன் என்பவர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது போலீஸார் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணாவின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கிருஷ்ணாவிற்கும் வீராவிற்கும் இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.