தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை பின்வருமாறு:
மே 3 - மொழிப்பாடம்
மே 5 -ஆங்கிலம்,
மே 7- கணினி அறிவியல்
மே 11 -இயற்பியல், பொருளாதாரம்
மே 17 - கணிதம், விலங்கியியல்
மே 19 - உயிரியியல், வரலாறு
மே 21 - வேதியியல், கணக்குப் பதிவியல்

காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை என 3 மணி நேரம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் முன்னதாக காலை 10 முதல் 10.15 வரை கேள்வித்தாள் படிக்க, மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்க என நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...