ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபுக்கு கலைமாமணி விருது: தமிழக அரசு அறிவிப்பு

2019-2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபுக்கு கலைமாமணி விருது: தமிழக அரசு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

2019-2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதன்படி நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
மேலும் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதவிர இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்த், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, சின்னத்திரை நடிகர்கள் நந்தகுமார், சாந்தி வில்லியம்ஸ், நித்யா, சண்டை பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2019-2020-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பட்டியலையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் 2019-ம் ஆண்டுக்கான சிறப்பு கலைமாமணி விருது, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா, நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கும் 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு கலைமாமணி விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
விருது அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மலை 5 மணிக்கு தலைமைச்செயலகம் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com