தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மதுரையில் பதுங்கியிருந்த பொடா சுரேஷ் கைது

மதுரையில் பதுங்கியிருந்த பொடா சுரேஷை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

மதுரையில் பதுங்கியிருந்த பொடா சுரேஷ் கைது

Updated On :19 பிப்ரவரி 2021, 8:24 am

DIN


 
மதுரையில் பதுங்கியிருந்த பொடா சுரேஷை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவன் மணிவாசகர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கின்போது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவலுக்கு உள்பட்ட பகுதியில் அரசு, அரசு ஊழியர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக பொடா சுரேஷின் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்ட் விவேக் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பொடா சுரேஷை சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மதுரையில் வெள்ளிக்கிழமை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் காவல்துறைக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுரேஷ், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.